கவர்னர் பதவி-இன்று ராஜினாமா செய்கிறார் பிரதீபா
டெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல், இன்று தனது ஆளுனர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல், அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட, வரும் 23ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருக்கிறார்.
இதையடுத்து தனது ராஜஸ்தான் மாநில ஆளுனர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சந்திக்கிறார்.
![]() |
பின்னர் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இப்போது முக்கிய அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வரும் பிரதீபா முன்னாள் பிரதமரும் ஜன மோர்சா தலைவருமான வி.பி.சிங்கை சந்தித்து பேசினார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பிய கரன் சிங்கையும் சந்தித்தார்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரையும் சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார்.
இவருடைய வேட்பு மனுவை முன்மொழிந்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் கையெழுத்திட்ட நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி மற்றும் ராஷ்ட்ரீய லோக் தள் தலைவர் அஜீத் சிங்கும் கையெழுத்திட்டார்.
கலாமுக்காக நெல்லையில் போராட்டம்:
இந் நிலையில் ஜனாதிபதியாக அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரி திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன் கூடி கோஷமிட்டனர்.
இதற்கிடையே அப்துல் கலாம் ஜனாதிபதி பதவிக்கு எவ்வகையில் பொருத்தமானவர் என்பதை விளக்க நாடெங்கும் பல அமைப்புகள் சிடிக்களை வெளியிட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் அழைப்பு:
கலாம் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 10ம் தேதி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்ட நடத்த வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி நாடெங்கும் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ்கள் பரவி வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications