ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு:பாஷா விடுதலை-11 பேருக்கு தண்டனை
சென்னை:சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 11 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில் பழனிபாபா கொலை செய்யப்பட்டு விட்டார். இமாம் அலி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். ஒருவர் தலைமறைவாக உள்ளார்.
சென்னை தடா நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை முடிவடைந்து தீர்ப்பு இரு முறை (மே 9, ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ராமசாமி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி எஸ்.ஏ.பாஷா, முக்தார் அகமது, அமினுதீன் ஷெரீப், முகம்மது அப்துல் அஸ்லம் ஆகியோர் ஏற்கனவே சிறையில் காலத்தை கழித்து விட்டதால் அவர்களை விடுவிப்பதாக அறிவித்தார்.
அபுபக்கர் சித்திக், ஹைதர் அலி, காஜா நிஜாமுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனைய விதித்தார்.
சஹாபுதீன், அப்துல் ரஹீம், அகமது ஞானியார், முகம்மது மூஸா, புஹாரி, முகம்மது அலி, முகம்மது சுபேர் ஆகிய 7 பேருக்கு தலா 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
ரபீக் அகமதுவுக்கு 3 ஆண்டு தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தீர்ப்பையொட்டி தடா நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications