கரன்சியால் வெல்ல முயலும் காங்: வைகோ
மதுரை:காங்கிரஸ் கட்சியினர் காந்தியின் கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டுக்களை கொடுத்து வாக்காளர்களை விலைககு வாங்க முயல்கின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
இடைத் தேர்தல் நடக்கும் மதுரை மேற்கு தொகுதியில் அடங்கிய செல்லூரில் நடந்த அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் கலந்து கொண்ட வைகோ பேசுகையில்,
மதுரையில் வன்முறை தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் காந்தியின் கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டுக்களை கொடுத்து வாக்காளர்களை விலைககு வாங்க முயல்கின்றனர். மதுரை மக்கள் அநியாயத்துக்கு துணை போக மாட்டார்கள்.
போலீசார் அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முதல்வராக கருணாநிதி இன்னும் எத்தனை நாள் இருப்பார். காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், திமுகவினரின் அராஜகத்துக்கு நீங்கள் துணை போகாதீர்கள்.
திமுகவினர் தங்கள் பழைய காருக்கு தாங்களே தீ வைத்துவிட்டு அதிமுகவினர், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுகின்றனர்.
தேர்தல் விதிமீறல் குறித்து புகார் கொடுக்கப் போகும் அதிமுகவினர் மீதே வழக்குப் போடுகிறார்கள்.
இங்கு தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. இத் தொகுதியில் 2005ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது முதல்வராக இருந்த ஜெயலலிதா நேரில் வந்து நிவாரணம் வழங்கியைத எண்ணிப் பார்க்க வேண்டும்.
வன்முறை என்பது இரு பக்கமும் கூர் தீட்டிய கத்தியாகும். அதிமுக தொண்டர்கள் எத்தனை நாள் தான் பொறுப்பார்கள். காலம் விரைவில் மாறும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications