சிக்கியது சிவாஜி திருட்டு விசிடி-6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையின் பல்வேறு இடங்களில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் சிக்கின. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரஜினி நடித்துள்ள சிவாஜி படம் ரிலீஸாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த நிலையில் திருட்டு விசிடி மற்றும் டிவிடிக்கள் புழக்கத்தில் இருப்பதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் தலைமையிலான போலீஸார் பர்மா பஜார், ஈவ்னிங் பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட சில இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இதில் சிவாஜி படத்தின் திருட்டு விசிடி மற்றும் டிவிடிக்கள் அதிக அளவில் சிக்கின. இதுதவிர நான் அவனில்லை, அற்புதத்தீவு உள்ளிட்ட தமிழ்ப் படங்கள், ஆபாசப் படங்கள் உள்ளிட்டவற்றின் திருட்டு விசிடி மற்றும் டிவிடிக்கள் சிக்கின.

இதுதொடர்பாக போலீஸார், சங்கரலிங்கம், ரவிச்சந்திரன், ஜகாங்கீர், துரை, மகேந்திரன், அசன் அலி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஷாகுல், ராஜா முகம்மது, மொஹைதீன் ஆகிய 3 பேர் தப்பி விட்டனர்.

திருட்டு விசிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க உதவிய கம்ப்யூட்டர்கள், அதி நவீன அச்சு இந்திரங்கள், விசிடி, டிவிடி கவர்கள் உள்ளிட்டவையும் போலீஸ் வேட்டையில் சிக்கின.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 33 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+