நாட்டு வெடிகுண்டுடன் சென்ற ரவுடிகுண்டு வெடித்து படுகாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நட்டு வெடிகுண்டுடன் சென்ற ரவுடி, அந்த குண்டு எதிர்பாராமல் வெடித்ததில் விரல் துண்டித்துப் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் பிரபு (27). அப்பகுதியில் பிரபல ரவுடி. நேற்று இரவு இவர் சைக்களில் நாட்டு வெடிகுண்டுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த ஸ்பீட் பிரேக்கர் குறுக்கிட்டது.
அதை எதிர்பாராத பிரபு, திடீரென பிரேக் போட்டார். அப்போது அவர் கொண்டு வந்திருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் பிரபுவின் கை தனியாக துண்டிக்கப்பட்டது.
படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
வடபாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து எதற்காக பிரபு குண்டுடன் சென்றார், என்ன திட்டத்துடன் அவர் போனார் என்பது குறித்து போலீஸால் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications