மனுத் தாக்கல் செய்தார் பிரதீபா பாட்டீல்அடுத்த வாரம் ஷெகாவத் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புடை சூழ, பிரதீபா பாட்டீல் இன்று குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால் ஜூலை 19ம் தேதி அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

Prathiba Patil

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் உள்ளிட்ட 12 சுயேச்சைகள் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவரின் மனுக்களும் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளே அதிகம்.

இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடது சாரிகளின் ஆதரவு பெற்ற பிரதீபா பாட்டீல், இன்று மனு தாக்கல் செய்தார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், இடது சாரித் தலைவர்கள் குருதாஸ் தாஸ் குப்தா, சீதாராம் எச்சூரி உள்ளிட்டோர் அவருடன் சென்றனர்.

Sonia, Prathiba Patil and Manmohan Singh

பின்னர் நாடாளுமன்ற செயலாளர் ஜெனரல் ஆச்சார்யாவிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் பிரதீபா பாட்டீல். அவரது வேட்பு மனுவை பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்மொழிந்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வழிமொழிந்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதீபா பாட்டீல் வெற்றி பெறுவது உறுதி. சமுதாயத்தில் பெண்கள் உயர் பதவிகளுக்கு வரும்போது கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதுபோலவே இப்போதும் பிரதீபாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கும், பிரதீபாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிடும் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் அடுத்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

வருகிற 30ம் தேதியுடன் மனுதாக்கல் முடிவடைகிறது. மனுக்கள் ஜூலை 2ம் தேதி பரிசீலனை செயய்ப்படும். 4ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+