நீலகிரியில் கனமழை-போக்குவரத்து ஸ்தம்பிப்புகுமரி, நெல்லை,கோவையிலும் பலத்த மழை
ஊட்டி:நீலகிரி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கன மழையால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து நீலகிரி மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஊட்டியின் பல முக்கிய் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி-கல்லட்டி, ஊட்டி-கோத்தகிரி, ஊட்டி-மைசூர் ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கூட மழை வெளுத்துக் கட்டி வருகிறது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சானி ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்திலும், கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்காசியில் நேற்று மாலை முதல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ததாம். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் பலத்தவ வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் ஒரே நாளில் 11 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியுள்ளதால், அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், ஒரு மாணவன் இறந்தான்.












Click it and Unblock the Notifications