சந்திரபாபு நாயுடு கொலை முயற்சி;நக்சல் தலைவர் என்கவுண்டரில் கொலை
அனந்தபூர்:ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்லத் திட்டமிட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த மாவோயிட்ஸ் நக்சல் இயக்கத் தலைவர் ராஜா மெளி என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
திருப்பதி அருகே அலிபிரி என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சந்திரபாபு நாயுடு படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த வழக்கில், மாவோயிட்ஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான ராஜா மெளலி என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மெளலிதான் நாயுடுவைக் கொல்லும் திட்டத்தை வகுத்தவர். இவர் மாவோயிஸ்ட் நக்சல் அமைப்பிந் மத்திய குழு உறுப்பினராகவும், மத்திய படை கமிஷனின் உறுப்பினராகவும் இருந்து வந்தார். இதுதவிர கர்நாடக மாநில மாவோயிட்ஸ் செயலாளராகவும் இருந்து வந்தார்.
இவர் மீது சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தர்மாவரம் ரயில் நிலையப் பகுதியில் ராஜா மெளலி தனது கூட்டாளிகளோடு வந்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மெளலியும், அவரது ஆட்களும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீஸார் திருப்பிச் சுட்டதில் மெளலி கொல்லப்பட்டார். இருப்பினும் அவருடன் வந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications