அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி
குவஹாத்தி:அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
குவஹாத்தியில், மச்சோவா மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல மசூதி ஒன்றின் அருகே இந்த பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மார்க்கெட்டுக்குக் காய்கறி வாங்க வந்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்.
குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியே ரத்தக்களறியாக காணப்பட்டது. உல்பா தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
குவஹாத்தி நகரில், 2வது ஆசிய கிராண்ட்ப்ரீ போட்டி நேற்று தொடங்கியது. அதேபோல, அபுபாச்சி மேளா என்கிற அஸ்ஸாம் மாநில திருவிழாவும் நேற்றுதான் தொடங்கியது. தாய்லாந்து நாட்டிலிருந்து வந்துள்ள தூதுக் குழுவும் குவஹாத்தியில் நேற்று மத்திய அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்பில் நேற்று ஈடுபட்டது.
இந்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகளையும் சீர்குலைக்கும் நோக்கில்தான் நேற்றைய குண்டுவெடிப்பு நடந்ததாக கருதப்படுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குவஹாத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications