வருகிறது ஈவினிங் கோர்ட்
சென்னை:குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் மாலை நேர நீதிமன்றங்கள் செயல்படவுள்ளன. ஜூலை 3ம் தேதி முதல் இவை தொடங்கி வைக்கப்படுகிறது.
நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலத்தில், மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இதையடுத்து தற்போது தமிழகத்திலும் மாலை நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன.
ஜூலை 3ம் தேதி முதல் மாலை நேர நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன. முதல் கட்டமாக 11 நீதிமன்றங்கள் அன்றைய தினம் தொடங்கி வைக்கப்படும்.
இதில் சென்னையில் 4, கோவை, நெல்லையில் தலா 2, மதுரை, சேலம், திருச்சியில் தலா ஒரு நீதிமன்றம் செயல்படும்.
இந்த மாலை நீதிமன்றங்கள் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
தற்போதைக்கு பெருநகர மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படும் இந்த நீதிமன்றங்கள், சாதாரண வழக்குகளை மட்டும் விசாரிக்கும். தற்போது ரெகுலர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளே இந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவர். இருப்பினும் அவர்களுக்கு கூடுதலாக பனிப் படி வழங்கப்படும்.
சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் இந்த 11 நீதிமன்றங்களின் செயல்பாட்டைப் பொருத்து இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நீதிபதிகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஜூலை 9ம் தேதி வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா லேப்டாப் கம்ப்யூட்டர்களை நீதிபதிகளுக்கு வழங்குவார். மொத்தம் 695 லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவுள்ளன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications