நீலகிரியில் வரலாறு காணாத மழைஜீப் மீது மரம் விழுந்து 2 பேர் பலி
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை, குளிர் மற்றும் மரம் விழுந்ததில் 3 பேர் இறந்தனர்.
தென் மேற்கு பருவ மழை வலுத்து வருகிறது. இதனால் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் மக்கள் வீடுளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால் ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி-கூடலூர், ஊட்டி-கோத்தகிரி, ஊட்டி-கல்லட்டி, ஊட்டி-மைசூர் ஆகிய சாலைகளில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் மிக பலத்த மழை பெய்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 562 மில்லிமீட்டர் அளவுக்கு நீலகிரி மாவட்டத்தில மழை பதிவாகியுள்ளது.
இந்த அடை மற்றும் கன மழையால் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. நிலச்சரிவுகளுக்கும் கணக்கே இல்லை.
நேற்று பிற்பகல் கூடலூரிலிருந்து ஊட்டிக்கு மோகன் (48), அவரது மகளும் சென்னையில் என்ஜீனியராக இருப்பவருமான அர்ச்சனா (23), கோவையைச் சேர்ந்த பொறியாளர் பிரசாத் (24), ஊட்டி, எடப்பள்ளியைச் சேர்ந்த பொறியாளர் ரேஷ்மா (23) ஆகியோர் ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரம் இருந்த மிகப் பெரிய மரம் பலத்த சப்தத்துடன் ஜீப் மீது விழுந்து நசுக்கியது. இதில் அர்ச்சனாவும், ஜீப் டிரைவர் ஆலீஸ் என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக இறந்தனர்.
மோகன் அதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினார். ரேஷ்மாவும், பிரசாத்தும் படுகாயமடைந்தனர். இதேபோல கடும் குளிருக்கு ஒருவர் ஊட்டியில் இறந்தார்.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டம் தத்தளித்து வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications