திட்டமிட்டபடி நாளை இடைத் தேர்தல்: கோபால்சாமி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மேற்குத் தொகுதியில் நாளை திட்டமிட்டபடி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
![]() |
மதுரை வந்த கோபாலசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட விரும்பவில்லை. தேர்தலை சுமூகமாகவும், அமைதியான முறையில் நடத்தவும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
மதுரை மேற்கு தொகுதியைப் பொறுத்தவரை தற்போது தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என தீர்மானித்துள்ளோம். எனவே திட்டமிட்டபடி நாளை இடைத் தேர்தல் நடைபெரும். 29ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.













Click it and Unblock the Notifications