ஸ்ரீகாந்த் வீட்டில் வந்தனா தங்கலாம்: லத்திகா சரண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ஸ்ரீகாந்த்தின் சட்டப்பூர்வ மனைவி வந்தனா என்பதால் ஸ்ரீகாந்த் வீட்டில் அவர் தங்கியிருக்க உரிமை உண்டு என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் லத்திகா சரண் பேசுகையில், நடிகர் ஸ்ரீகாந்த்தும், வந்தனாவும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால், ஸ்ரீகாந்த் வந்தனா தங்கியிருப்பதற்கு உரிமை உள்ளது.ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
தங்களது கல்யாணம் குறித்த சான்றாக, பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழின் நகலை வந்தனா கொடுத்துள்ளார். அது உண்மையானதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்திற்கு நாங்கள் அறிக்கை அனுப்புவோம் என்றார் லத்திகா சரண்.












Click it and Unblock the Notifications