தீவிர பிரசாரத்தில் குதிக்கும் பிரதீபா1ம் தேதி சென்னையில் தொடங்குகிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் தனது பிரசாரத்தை ஜூலை 1ம் தேதி சென்னையிலிருந்து தொடங்குகிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீல், குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் பைரான் சிங் ஷெகாவத் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

Prathiba Patil

இரு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கலை முடித்து விட்டனர். இதையடுத்து இருவரும் தீவிரப் பிரசாரத்தில் குதிக்கின்றனர்.

பிரதீபா பாட்டீல் ஜூலை 1ம் தேதி முதல் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். சென்னையிலிருந்து தனது பிரசாரத்தை அவர் ஆரம்பிக்கிறார். நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ய பிரதீபா பாட்டீல் திட்டமிட்டுள்ளார்.

ஜூலை 1ம் தேதி சென்னைக்கு வரும் பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

அதன் பின்னர் அன்று சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் மகளிர் பேரணியிலும் பங்கேற்கிறார். அதைத் தெடார்ந்து டெல்லி திரும்புகிறார். பின்னர் 5ம் தேதி கேரளா, புதுச்சேரியிலும், 6ம் தேதி ஆந்திராவிலும், 7ம் தேதி ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப்பிலும் ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் டெல்லி திரும்பி அம்மாநில எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களிடம் ஆதரவு கோருகிறார்.

பிரதீபா பாட்டீல் பிரசாரத்திற்குச் செல்லும்போது அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள் உடன் செல்வார்கள். பிரதீபா பாட்டீலின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் பிரதீபாவுடன் உடன் செல்வார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் சார்பில் தேர்தல் பணிகளைப் பார்த்துக் கொள்வதற்காக ரேணுகா சவுத்ரி, ஜெயந்தி நடராஜன், தேவேந்திர திவிவேதி, அபிஷேக் சிங்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர உயர் மட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அகமது படேல், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, சுரேஷ் பச்சோரி, ஜெயந்தி நடராஜன், ஜனார்த்தன் திவிவேதி, பிருத்விராஜ் செளகான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+