சென்னையில் மகிந்திரா-ரெனால்ட் இணைந்துலோகன் கார்கள் தயாரிக்க புதிய தொழிற்சாலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் ரெனால்ட் ஆகியவை இணைந்து சென்னையில் இன்னொரு கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவவுள்ளன.
மகிந்திரா நிறுவனம் சமீபத்தில் லோகன் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இதன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போது நாசிக்கில் உள்ள மகிந்திரா ஆலையில் தான் லோகன் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இதன் உற்பத்தியை அதிகரிக்க சென்னையில் ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய கார் தொழிற்சாலையை அமைக்கிறது மகிந்திரா.
இங்கு ஆண்டுக்கு 40,000 கார்கள் தயாரிக்கப்படும்.
இதற்கிடையே லோகன் கார்களில் மேலும் 2 மாடல்களையும் மகிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications