கள்ளச்சாராய வியாபாரிகளை துரத்தியகாவலர் கிணற்றில் விழுந்து பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: கள்ளச்சாராய வியாபாரிகளைத் துரத்திக் கொண்டு ஓடியபோது, கிணற்றில் விழுந்து காவலர் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் ரமேஷ் (38) என்ற காவலர் பணியாற்றி வருகிறார்.
செங்காடு என்ற கிராமத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரமேஷ் அங்கு சென்றார். ரமேஷைப் பார்த்ததும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து ஓடினர். அவர்களை ரமேஷ் துரத்திச் சென்றார்.
அப்போது வழியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து அடிபட்டு இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications