3-வது அணி தேறவே தேறாது-இளங்கோவன்
திருப்பூர்:இந்திய அரசியலில் 3வது அணியால் தேறவே முடியாது என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், 3-வது அணியை உருவாக்குவோம். நாட்டின் சரித்திரத்தை நேர்மாறாக மாற்றுவோம் எனக் கூறிக் கொண்டு டெல்லிக்கும், ஐதராபாத்துக்கும் பறந்தார் ஜெயலலிதா.
மாறி மாறி கூட்டம் நடத்தியும், கடைசியில் அவர்களால் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.
இந்திய அரசியலில் 3வது அணி தேறவே தேறாது. 3வது அணிக்கு இடமே இல்லை.
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில், எதிர்பார்த்தைவிட அத்தொகுதி மக்கள் உற்சாகமாக வாக்களித்துள்ளனர். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைவரும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என பா.ஜ.க. கூறியுள்ளது. ஆகவே தான் சிவசேனா கட்சியே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது.
எனவே பா.ஜ.க கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள், மனசாட்சிப் படி பிரதீபா பாட்டீலுக்கு வாக்களிப்பார்கள் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications