48 மணி நேரத்திற்கு மழை கொட்டும்!
சென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல், ஆந்திராவை சமீபத்தில் அலைக்கழித்து விட்டு ஓய்ந்துள்ள நிலையில், ஒரிஸ்ஸா கடலோர பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
அது நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை இருக்கும்.
தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications