திருப்பதி-தங்கும் விடுதிகளிலும் இனி அன்னதானம்:ஆஸ்தான பாடகர் பாலமுரளி கிருஷ்ணா
திருப்பதி:திருப்பதி கோவிலுக்கு வருபவர்களுக்கு இனி தங்கும் விடுதிகளிலேயே அன்னதானம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் அவர்களின் வசதிக்காக பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதில் ஒன்றாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவர்கள் தங்கும் விடுதிகளிலேயே உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை அன்னதான திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதுவரை தேவஸ்தான உணவகம் மற்றும் புதிதாக உணவகம் மூலம் 3,000 பேர் அமர்ந்து சாப்பிட முடிந்தது.
இனிமேல் இந்த அன்னதான திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் 40,000 பேருக்கு உணவு வழங்கப்படும்.
ஆஸ்தான பாடகர் பாலமுரளி:
இந் நிலையில் பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவை திருப்பதி கோவிலின் ஆஸ்தான பாடகராக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications