பிரதீபாவை வாபஸ் பெற அத்வானி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஜனாதிபதி வேட்பாளரான பிரதீபா பாட்டீல் மீது ஏராளமான குற்றசாட்டுகள் இருப்பதால், அவரை நிறுத்துவரு குறித்து காங்கிரஸ் கூட்டணி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

Prathiba Patil

அத்வானி கூறுகையில், பிரதீபா பாட்டீல் மீது நாங்கள் எந்த குற்றசாட்டையும் கூறவில்லை. அவையெல்லாம் ரிசர்வ் வங்கி அறிக்கைகள், பத்திரிக்கை விசாரணைகள் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவை மூலம் வெளியான குற்றசாட்டுகள்.

காங்கிரஸ் தலைமையில் பலருடைய பெயர்கள் பரிசிலீக்கப்பட்டன. ஆனால் செல்வாக்கானவர்களை விட்டுவிட்டு, செல்வாக்கற்ற ஒருவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் மீது இதுவரை இல்லாத அளவு அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதனால் அவரை வேட்பாளராக நிறுத்துவதை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Advani

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சிவ சேனாவுடனான கூட்டணி உறவை முறிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதீபா பாட்டீல் மீது பாஜக எந்த குற்றசாட்டும் கூறவில்லை. அவை எல்லாம் பிரதீபா பாட்டீல் வேட்பாளராக நியமிப்பதற்கு முன்பாகவே நடந்த உண்மைகள். ஆதலால் நாங்கள் அவர் மீது சேற்றை வாரி இறைப்பதாக கூறப்படுவது தவறு.

திறமையான நிர்வாகியான பிரதமர் மன்மோகன் சிங், பிரதீபா பாட்டீலை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன் அவரைப் பற்றியும், அவருடைய குடும்பத்தை பற்றியும் விசாரிக்காததும், அவருக்காக வக்காலத்து வாங்குவது விசித்திரமாகவும், கேலி கூத்தாகவும் இருக்கிறது.

பிரதீபா பற்றி எல்லா உண்மைகள் தெரிந்தும் ஜனாதிபதி பதவியில் வளைந்து கொடுப்பவராக ஒருவர் வேண்டும் என்பதற்காக பிரதீபா பாட்டீலை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர் என்றைர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+