சிசேரியன் சிறுவன்: முன்ஜாமீன் தர முடியாது- உயர்நீதிமன்றம்
மதுரை:பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்து சர்ச்சையில் சிக்கி தலைமறைவாகியுள்ள மணப்பாறை டாக்டர் தம்பதியின் மகன் திலீபன் ராஜுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க முடியாது. இதுதொடர்பாக சிறுவர் சீர்திருத்த வாரியத்தைத்தான் அணுக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.
![]() |
15 வயதாகும் தங்களது மகனை வைத்து சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ய வைத்த சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ள மணப்பாறை டாக்டர் முருகேசன், டாக்டர் காந்திமதி தம்பதியின் மகன் திலீபன் ராஜ் தலைமறைவாக உள்ளார்.
முன்ஜாமீன் கோரி அவரது சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இன்றைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜசூர்யா, திலீபன் ராஜ் ஒரு மைனர். எனவே அவரைக் கைது செய்தால் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில்தான் அடைக்க முடியும்.
எனவே சிறுவர் சீர்திருத்த வாரியத்தை அணுகிதான் முன்ஜாமீன் பெற முடியும். எனவே இந்த மனு பைசல் செய்யப்படுகிறது என்று கூறி மனுவைப் பைசல் செய்வதாக அறிவித்தார்.-













Click it and Unblock the Notifications