வாக்கு எண்ணிக்கை மையத்தில் நிருபர்களுக்கு தடை: போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரையில் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தக்குள் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைக் கண்டித்து நிருபர்கள் பேராட்டத்தில் குதித்தனர்.
தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டைகள் வைத்திருந்தும் கூட பாதுகாப்பு என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை மத்தியப் படையினரும் அதிகாரிகளும் அனுமதிக்க மறுத்தனர்.
இதனால் தேர்தல் முடிவுகளை அறிய நிருபர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேர்ந்தது. கடும் சிரமப்பட்டே ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.
இதைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி வளாகம் முன் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீசார் ஓடி வந்து சமாதானப்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications