மும்பையில் பெரும் வெள்ளம்-நகரம் ஸ்தம்பித்து
மும்பை:
புயல் மற்றும் பருவமழை காரணமாக மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக மஹாராஷ்டிராவில் பலத்த மழை பெய்தது. இதனால் மும்பை நகரில் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழை ஓய்ந்த நிலையில் நேற்று ஒரிஸ்ஸாவில் புயல் கரையை கடந்ததின் விளைவாக மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காலை முதல் இரவு வரை விடாமல் மழை பெய்தது. 178 மி.மீ மழை பெய்துள்ளது.
இதனால் மும்பை பந்தரா, மாதுங்கா மற்றும் மத்திய மும்பை பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனால் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள், வெளியூர் செல்லும் ரயில்கள் தாமகதாகவே செல்கின்றன.
இந்த மழையால் விமான போக்குவரத்தும் பாதித்துள்ளது. பல விமானங்கள் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் கார்களும், இரு சக்கர வாகனங்களும் வெள்ளத்தில் மிதந்தவாறு செல்கின்றன.
இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரத்னகிரி மாவட்டத்தில் வெள்ளப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவியாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications