ராமதாஸ் புகாருக்கு திமுக பதிலடி!
சென்னை:
தமிழகத்தில் உயர் கல்வித்துறை இருக்கிறதா என தெரியவில்லை என ராமதாஸ் கூறி்யுள்ளதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவி்த்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழகத்தில் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் மிக அதிக அளவில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன. இதைத் தடுக்க வேண்டிய உயர் கல்வித் துறை என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு துறை இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை என்றார்.
இதற்கு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவ கல்லூரிகளை கட்டுபடுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. அது மத்திய அரசிடம் உள்ளது. இந்திய மருத்துவ கழகம், டெல்லி மருத்துவ கழகம், இந்திய பல் மருத்துவ கழகம் ஆகியவை மத்திய அமைச்சரான அன்புமணி ராமதாஸ் அதிகாரத்தின் கீழ் இயங்குகின்றன.
மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் கோரி இந்த அலுவலகங்களின் முன் ராமதாஸ் போராட்டம் நடத்த தயாராக இருந்தால், நானும் முதல்வர் கருணாநிதியின் அனுமதி பெற்று அவருடன் போராட்டம் நடத்த தயாரா இருக்கிறேன்.
இப்படி பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டாமல், கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து ராமதாஸ் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அந்த கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications