எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ராஜேந்திரன்
சென்னை:
மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.கே.ராஜேந்திரன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
மதுரை மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.கே.ராஜேந்திரன், திமுகவின் துணையுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து நேற்று சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது வெற்றிக்குக் காரணமான மு.க.அழகிரியும் உடன் இருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று அவர் எம்.எல்.ஏவாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். சபாநாயகர் ஆவுடையப்பனின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரனுக்கு சபாநாயகர் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் ராஜா, ரகுபதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், துணை சபாநாயகர் என்.பி. துரைசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதியின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பணியாற்றுவேன். மத்திய, மாநில அரசுகளின் துணையுடன் தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். செல்லூர் போன்ற பள்ளமான பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பேன்.
தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை கொடுப்பேன் என்றார் ராஜேந்திரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications