கோவிலில் கொள்ளை முயற்சி-காவலாளி கொலை
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிபூண்டி அருகே கோவிலில் கொள்ளையடிக்க வந்த கும்பலை தடுத்த காவலாளியை அக் கும்பல் கொலை செய்தது.
பனப்பாக்கத்தைச் சேர்ந்த வரதராஜன்(56) என்பவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள சக்தி வேட்டம்மன் கோவிலில் காவலாளியாக இருந்து வந்தார். இவர் கோவிலிலேயே தங்கியிருந்தார்.
நேற்றிரவு கோவிலில் வரதராஜன் உறங்கிக் கொண்டிருந்தபோது, சிலர் கோவில் கதவை கடப்பாரையைக் கொண்டு உடைத்துள்ளனர். இதையடுத்து ஓடி வந்த வரதராஜன் அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கடப்பாரையால் வரதராஜனின் தலையில் அடித்தனர், கத்தியால் குத்தினர். இதில் வரதராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அக் கொள்ளைக் கும்பல் தப்பியோடிவிட்டது.
கடந்த வாரம் கும்மிடிபூண்டி பகுதியிலுள்ள நத்தம், ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களிலுள்ள கோவில்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந் நிலையில் இந்தக் கோவிலிலும் கொள்ளை முயற்சி நடந்து காவலாளி கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த கோவில் அருகே தான் கவரப்பேட்டை காவல் நிலையமும், செக் போஸ்ட்டும் உள்ளன என்பதும் நெடுஞ்சாலை கண்காணிப்புப் போலீஸார் அடிக்கடி ரோந்து செல்வதுண்டு என்பதும் குறிப்பிடத்தத்தது.












Click it and Unblock the Notifications