ஜனாதிபதி தேர்தலில் 84 மனுக்கள் தாக்கல்
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
மனுத் தாக்கல் முடிவைடந்த போது மொத்தம் 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதுவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு வேட்பு மனுக்கல் தாக்கலானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மட்டும் 33 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பிரதீபா பாட்டீல் சார்பில் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் அடங்கும்.
நேற்று தாக்கலான 33 மனுக்களில் 20 மனுக்கள் உரிய முறையில் இல்லாததால் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இதுவரை மொத்தம் 37 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாளை மீதமுள்ள வேட்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பிரதீபா மேலும் 2 வேட்பு மனு தாக்கல்:
இந் நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதீபா பாட்டீல், மேலும் 2 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இத்தகவலை பிரதீபாவின் தேர்தல் நிர்வாகியும், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறினார். அவர் கூறுகையில், பிரதீபா பாட்டீலின் வேட்பு மனுவை 265 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முன் மொழிந்துள்ளனர். 275 எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வழி மொழிந்துள்ளனர்.
லட்சத் தீவைத் தவிர மற்ற அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இதில் அடங்குவர்.
பிரதீபாவின் முதல் கட்டப் பிரசாரம் சென்னையில் தொடங்குகிறது. 2வது கட்டப் பிரசாரம் ஜூலை மாதத்தில் தொடங்கும்.
பிரதீபா பாட்டீல் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை. பிரதீபா மகளிர் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தபோது அந்த வங்கியின் தலைவராகவோ அல்லது இயக்குநராகவே பிரதீபா பாட்டீல் இல்லை.
இந்த வங்கி விவகாரம் தொடர்பான வழக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது பரிசீலனைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி கொடுத்த அறிவுரைப்படியே முடிவெடுத்தனர். பிரதீபா வங்கிக்கு எதிராக எந்தவிதமான கருத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவிக்கவில்லை.
அது மட்டுமல்ல, ராஜஸ்தான் மாநில ஆளுநராக பிரதீபா பாட்டீல் பதவியேற்றபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது பாஜகவோ எந்தவித அதிருப்தியையும், ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது பிரச்சினையைக் கிளப்புவது குடியரசுத் தலைவர் தேர்தலை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்பது தெளிவாகியுள்ளது என்றார் முன்ஷி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications