அந்தியூர்-பாறையில வேன் மோதி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அந்தியூர்:பர்கூர் மலைப் பகுதியில் வேனின் பிரேக் செயலிழந்ததால் மலையின் சுற்று சுவர் பாறை மீது வேன் மோதி கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 2 பேர் பலியாயினர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த மாதப்பன்(42), ரவி(23), மாரப்பன்(23) ஆகியோர் வேனில் அந்தியூர் வந்தனர். வேனை நடராஜன் என்பவர் ஓட்டினார்.
வேன் பர்கூர் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் செயலிழந்தது.
இதனால் கட்டுபாட்டை இழந்த வேன் மலைப் பாதையின் பாறை மீதி பயங்கரமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் ரவியும், மாதப்பனும் வேனுக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாரப்பன் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக அந்தியூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேனில் டிரைவர் நடராஜன் ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications