அமர்நாத் பனி லிங்கம் உருகியது-தரிசனம் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:அமர்நாத் குகை கோவிலில் உருவான பனி லிங்கம் வெப்ப நிலை மாறுபாட்டால் உருகியது. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அமர்நாத்தில் ஒவ்வொரு ஆண்டு இயற்கையாக பனி லிங்கம் உருவாகும். இதை காண ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை வருவர்.இந்த வருடமும் பனி லிங்கம் உருவானது. ஆனால் மழை காரணமாக பனி லிங்கத்தை தரிசிக்கச் செல்ல மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் மழை இல்லாத நாட்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் மழையில்லாத நாட்களில் வெப்ப நிலை அதிகமானது. இதனால் பனி லிங்கம் உருக ஆரம்பித்துள்ளது. இதனால் புனித யாத்திரை வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது அங்கு மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பனி லிங்க தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications