கிரிக்கெட்: நாளை இந்தியா-பாக் மோதல்
கிளாஸ்கோ:நாளை ஸ்காட்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அயர்லாந்து பயணத்தை முடித்து கொண்டு இந்திய அணி, ஸ்காட்லாந்து சென்றுள்ளது. கிளாஸ்கோ நகரில் நாளை பாகிஸ்தானை ஒரு நாள் போட்டியில் சந்திக்கிறதப.
நேற்று முன்தினம் கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதவிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தப் போட்டி நடக்குமா என்பது சந்தேகத்திற்கிடமானது.
ஆனால் திட்டமிட்டப்படி போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 109வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்த 108 போட்டிகளில் இந்தியா 40 போட்டிகளிலும், பாகிஸ்தான் 64 போட்டிகளிலும் வென்றுள்ளன.
இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இரு அணிகளுக்கிடையேயான போட்டி தொடங்குகிறது.
ட்வெண்டி 20-ஆஸி வீரர்கள் அறிவிப்பு:
இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் ட்வெண்டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்கான கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
30 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை மத்தியில் இது 15 பேராக குறைக்கப்படும்.












Click it and Unblock the Notifications