2 மாதத்தில் புதுக் கட்சி: சரத்குமார் சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் (சிவகங்கை):

இன்னும் 2 மாதங்களில் புதிய கட்சி தொடங்கப்படும். இந்தக் கட்சி சாதிமத பேதமற்ற கட்சியாக திகழும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

Jayalakshmi

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சரத்குமார் முன்னிலையில் அவரது ரசிகர் மன்றத்தில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார் இன்னும் 2 மாதங்களில் புதிய கட்சி தொடங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், நாங்கள் உருவாக்கும் கட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், மக்களின் கருத்து என்ன என்பதை இன்னும் 2 மாதங்கள் கேட்க இருக்கிறோம். இதையெல்லாம் கேட்டு சிறப்பான கொள்கை வடிவம் உருவாக்கப்படும். இந்த கொள்கைகளைப் பார்த்து இவர்கள்தான் ஆள வேண்டும் என நினைப்பீர்கள்.

இன்னும் 2 மாதங்களில் புதுக் கட்சியைத் தொடங்கப் போகிறாரே, இவர் என்ன செய்யப் போகிறார் என்று நினைக்கலாம். டெல்லி ராஜ்யசபா எம்.பி பதவியை கருணாநிதி எனக்குக் கொடுத்தார். அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.

மக்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவையெல்லாம்தானே வேண்டும். இதை விட்டு விட்டு வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது உண்டு. எதுவுமே ஜனநாயக முறையில் நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

நீங்கள் நினைக்கும் சிறப்பான கட்சியை நாங்கள் உருவாக்குவோம். நாளைய தமிழகம் வளம் பெற, இளைஞர் சமுதாயம் வளம் பெற என் உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன். அத்தகைய சிறப்பான கட்சியாக, ஜாதி, மத பேதமற்ற கட்சியாக நமது புதிய கட்சி திகழும் என்றார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+