சிவகங்கை கார் குண்டுவெடிப்பு: தேடப்பட்டதிமுக கவுன்சிலர், என்ஜீனியர் பாலா சரண்!

Subscribe to Oneindia Tamil

குளித்தலை:சிவகங்கை திமுக நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவெடிப்பில் பலியான வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக கவுன்சிலர் மந்தக்காளை மற்றும் வெடிகுண்டைத் தயாரித்த என்ஜீனியர் பாலா ஆகியோர் கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தனர்.

சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்து வந்த முருகன், கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். உட்கட்சி மோதல் மற்றும் கேபிள் டிவி மோதல் விவகாரத்தில் முருகன் கொல்லப்பட்டார்.

Bala with family

இதுதொடர்பாக திமுக கவுன்சிலர் மந்தக்காளை மற்றும் வெடிகுண்டு தயாரித்துக் கொடுத்த என்ஜீனியர் பாலா ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இது தொடர்பாக பாலாவின் மனைவியையும் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து பாலாவின் மனைவி சாந்தி நேற்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Sivagangai bomb blast

இந் நிலையில், பாலாவும், மந்தக்காளையும் இன்று காலை குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பாலாவும், மந்தக்காளையும் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டதால் அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க சிவகங்கை போலீஸார் குளித்தலைக்கு விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+