சென்னை ரயில் நிலையத்தில் பயணிகள் மறியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மின்சார ரயில்கள் தாமதாக வருவதை கண்டித்த சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி போன்ற பகுதகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
நேற்றிரவு ரயில்கள் தாறுமாறான நேரத்தில் வந்தன. இதனால் பொறுமையிழந்த பயணிகள் கடற்கரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து, இனி சரியான நேரத்திற்கு ரயில்களை இயக்குவதாக உறுதியளித்ததையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications