ராணுவத் தாக்குதலில் 4 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் நடந்த கடும் சண்டையில் நான்கு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், முகமலை பகுதியில் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி விடுதலைப் புலிகள் ஊடுறுவ முயன்றனர். அவர்களைத் தடுத்து ராணுவம் கடும் சண்டையிட்டது.
இதில் நான்கு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். நான்கு விடுதலைப் புலிகளின் உடல்களையும் மீட்க ராணுவம் முயன்றது. ஆனால் அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால் அது முடியவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications