அதிமுக ஆட்சி வழக்கு-மந்திரி எம்ஆர்கே விடுதலை
கடலூர்:கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மீதும் அவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
கடலூர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், ரூ. 35 லட்சத்து 63 ஆயிரத்து 50 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். இது பொய் வழக்கு என்று பன்னீர் செல்வம், செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீனதயாளன் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
2001, 2002ம் ஆண்டிலும் பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications