பிரதீபாவுக்கு எதிரான மனு-உச்சநீதிமன்றம் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிராகரித்துவிட்டது.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார். அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனது மனுவில், பிரதீபா பாட்டீல் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றசாட்டுகள் இருக்கின்றன. அதனால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications