வக்கீல்கள் ஸ்டிரைக்-உயர்நீதிமன்றம் ஸ்தம்பிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உயர்நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பித்தன.

சேலம் மாவட்டம் மேட்டூரில் வழக்கறிஞர்கள் வெற்றிவேல், சுரேஷ்குமார் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து தகராறு செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீஸாரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆஜரவாதற்காக மேட்டூர் டி.எஸ்.பி. அசோக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வந்தபோது அவர்களை வழக்கறிஞர்கள் கடுமையாகத் தாக்கினர்.

ஹெல்மட்டுகளை வைத்தும் கூட போலீஸாரை சரமாரியாக அடித்தனர். இதுதொடர்பாக 29 வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கையை கண்டித்து வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று வேலைநிறுத்தம் நடந்தது.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கங்களைப் புறக்கணித்தனர். ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் சென்று அங்கிருந்த வழக்கறிஞர்களை வெளியே அழைத்து வந்தனர்.

இதனால் வழக்குகளை நடத்த முடியாமல் நீதிபதிகள் வழக்குகளை ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+