லண்டன், கிளாஸ்கோ தாக்குதல் முயற்சி:இந்திய டாக்டர்களின் சதி நிரூபணம்
லண்டன்:லண்டனில் கார் குண்டுகளை விட்டுச் சென்றது, கிளாஸ்கோ விமான நிலையத்தைத் தகர்க்க நடந்த சதி ஆகியவற்றில் இந்தியாவைச் சேர்ந்த 2 டாக்டர்களின் பங்கு நிரூபணமாகியுள்ளதாக ஸ்காட்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். இரு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 6 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன் கார் குண்டுகள் மற்றும் கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதல் முயற்சி தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் முகம்மது ஹனீப் என்ற டாக்டர் கைது செய்யப்பட்டார்.
![]() |
இவர் தவிர இந்தியாவைச் சேர்ந்த ஆசிப் அலி, சபீல் அகமது ஆகிய இரு டாக்டர்களும் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று பேருமே பெங்களூரில் மருத்துவம் பயின்றவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று டாக்டர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிப் அலி மீது எந்தத் தவறும் இல்லை என்பது தெரிய வந்ததால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்ற இரு டாக்டர்களுக்கும் தீவிரவாத சதித் திட்டத்திற்கும் பெரும் பங்கு இருந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முகம்மது ஹனீப்பை லண்டனுக்கு அழைத்துச் செல்ல ஸ்காட்லாந்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரி ஒருவர் ஆஸ்திரேலியா விரைந்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை மூலம் லண்டன், கிளாஸ்கோ தீவிரவாத முயற்சிகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை இந்திய டாக்டர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்கள் விவரம் டாக்டர் முகம்மது ஹனீப், டாக்டர் சபீல் அகமது, டாக்டர் முகம்மது ஆஷா (சவூதியைச் சேர்ந்தவர்), அவரது மனைவி மார்வா, டாக்டர் பிலால் அப்துல்லா (ஈராக்), காலித் அகமது, மேலும் இரண்டு டாக்டர்கள்.
முகம்மது ஹனீப்புடன் கைது செய்யப்பட் சபீல் அகமது, ஹனீப்பின் உறவினர் ஆவார். செஷைர் நகரில் உள்ள மருத்துவமனையில் சபீல் அகமது பணியாற்றி வந்தார்.
சபீல் அகமதுவுக்கும், டாக்டர் பிலால் அப்துல்லாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. அவர் மூலம்தான் சபீல் அகமது தீவிரவாதிகளின் நெட்ஒர்க்கில் இணைந்துள்ளார்.
பிலாலுக்கு ஈராக்கைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. இவர்தான் லண்டனில் குண்டுகள் வைக்கப்பட்ட கார்களை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். இரு தீவிரவாத செயல்களுக்கும் மூளையாக இருந்து செயல்பட்டவரும் அப்துல்லாதான்.
சபீல் அகமது, லண்டனைச் சேர்ந்த வலதுசாரி முஸ்லீம் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். அங்கு வைத்துத்தான் அப்துல்லாவை சபீல் சந்தித்துள்ளார்.
ஹனீப்பின் செல்போன் சிம் கார்டை வாங்கிய சபீல் அகமது அதன் மூலம் தனது தீவிரவாத செயல்களை நிறைவேற்றி வந்துள்ளார். தகவல் பரிமாற்றத்தையும் ஹனீப்பின் செல்போன் சிம்கார்டு மூலமே மேற்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் இந்த செல்போன் சிம்கார்டில் உள்ளன. லண்டனில் கார் குண்டுகளை வைத்து விட்டதை சந்தோஷத்துடன் இவர்கள் கொண்டாடுவது போன்ற புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சிம் கார்டின் மூலம்தான் அத்தனை பேரும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக 6 டாக்டர்கள் கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications