நக்சல் அபாயம் - திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
திருப்பதி:நக்சலைட்டுகள் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அனந்தபூர் மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஆசாத் அகமது குரேஷி என்பவர் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி என்ற இடத்தில் பிடிபட்டார்.
இதையடுத்து நக்சலைட்டுகளுக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்புகள் ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திர மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
அப்போது கோவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நக்சலைட்டுகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு திருப்பதி கோவிலில் மிகவும் விரிவான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications