சிவகங்கை கண்மாயில் வெடிகுண்டு குவியல்
சிவகங்கை:நகராட்சித் தலைவர் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவத்திலிருந்து சிவகங்கை மக்கள் இன்னும் மீளாத நிலையில் அங்குள்ள கண்மாயில் வெடிகுண்டுக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கடந்த 29ம் தேதி கார் குண்டுவெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பிலிருந்து இன்னும் சிவகங்கை மக்கள் மீளவில்லை.
இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள கண்மாய் ஒன்றில் வெடிகுண்டுக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே உள்ள பையூர்பிள்ளைவயலில் இருக்கும் கண்மாயில் சிலர் குளிக்க சென்றனர். அப்போது ஒரு பாலீதின் கவரில் உருண்டை உருண்டையாக ஏதோ இருந்துள்ளது. அதனை பார்த்த அவர்கள் உடனே போலீஸை அணுகிக் கூறினர்.
இதையடுத்து அங்கு காவல்துறை அதிகாரிகள், போலீஸார் விரைந்தனர். வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களும் மோப்ப நாய்களுடன் சென்றனர். பின்னர் தகுந்த முன்னேற்பாடுகளுடன் பிளாஸ்டிக் பையை எடுத்துத் திறந்து பார்த்தனர்.
அப்ேபாது அதில், 5 வெடிகுண்டுகள் இருந்தன. உடனடியாக அவை செயலிழக்கச் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் வேறு குண்டுகள் இருக்கிறதா என்பதை அறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த குண்டுகள் எப்படி கண்மாய்க்கு வந்தன, முருகனைக் கொைல செய்த கும்பல்தான் போட்டு விட்டுச் சென்றதா, அல்லது வேறு கும்பலுக்கு இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications