து.ஜனாதிபதி: என்னை யாரும் அணுகவில்லை-பரதன்
ராஞ்சி:துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்பது குறித்து என்னிடம் யாரும் இதுவரை ஆலோசனை நடத்தவில்லை, பேசவும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பரதன் பேசுகையில், இடது சாரி தலைவர்களோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களோ இதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை.
எனக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டால் அதை ஏற்பேனா என்பது குறித்து இப்போதே கருத்து கூற முடியாது. முதலில் அந்தப் பேச்சே எழவில்லையே.
லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
பிரதீபா பாட்டீல் மிகப் பெரும் வெற்றி பெறுவார். அவரது பெயரைக் கெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், பாஜக தலைவர்களும் தீவிரமாக முயற்சிப்பது கடுமையாக கண்டித்தக்கத்தாகும் என்றார் பரதன்.












Click it and Unblock the Notifications