முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மீதுவரதட்சணைக் கொடுமை புகார்
சேலம்:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ இளையகண்ணு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி இளவரசி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
![]() |
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளையகண்ணு. அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் இளவரசி.
இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனை சந்தித்து இளவரசி கொடுத்த புகாரில், கல்யாணத்தின்போது, ரூ. 80 ஆயிரம் ரொக்கம், 24 பவுன் நகை ஆகியவை இளையகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.
![]() |
மேலும், கல்யாணத்திற்குப் பிறகு மேலும் 22 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவையும் தரப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக பணம், நகை வாங்கி வருமாறு கூறி எனது கணவர் கொடுமைப்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக நான் கடந்த 1999ம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்தேன். அப்படியும் அவரது கொடுமை குறையவில்லை.
இந்த நிலையில் எனது வீட்டிலிருந்து ரூ. 20 லட்சம் பணம் வாங்கி வர வேண்டும். இல்லாவிட்டால், ஏற்காட்டைச் சேர்ந்த கெளரி என்ற பெண்ணை மணக்கப் போவதாக மிரட்டுகிறார் எனது கணவர். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகாரில் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications