சாலையில் இறங்கிய விமானம்-9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குலியகான் (மெக்சிகோ):மெக்சிகோவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு விமானம், நிலை தடுமாறி சாலையில் இறங்கியதால், 9 பேர் பலியானார்கள்.
வடக்கு மெக்சிகோவில் உள்ள குலியகான் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நகரில் உள்ள விமான நிலையத்திற்கு சரக்கு விமானம் ஒன்று வந்தது.
தரையிறங்கும்போது நிலை தடுமாறி ரன்வேயை விட்டு விலகி அருகில் உள்ள சாலையில் விமானம் இறங்கியது. இதில், ராணுவ வாகனம் உள்பட பல கார்கள் சிக்கி நசுங்கின. இந்த சம்பவத்தில் கார்களில் இருந்த 9 பேர் பலியானார்கள்.
இறந்தவர்களில் இருவர் ராணுவ வீரர்கள் எனத் தெரிய வந்துள்ளது. விமான ஊழியர்கள் 3 பேரும் இதில் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications