மாணவி கொடுத்த மது விருந்தில் ரகளை:அடைய முயன்ற இளைஞர்களால் சண்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை:கால் சென்டரில் பகுதி நேர வேலை பார்த்து வரும் மாணவி கொடுத்த மது விருந்தில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதால் பெரும் ரகளை ஏற்பட்டு அவர்கள் மீது அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் திவ்யா. இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார்.

இவரது தந்தை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக உள்ளார். தாயார் ஆந்திர மாநிலத்தில் அரசு அதிகாரியாக உள்ளார். தாயார் ஆந்திராவிலேயே தங்கியுள்ளார். எப்போதாவதுதான் வருவார். தந்தையும் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் சென்றபடி இருப்பார்.

எனவே திவ்யா மட்டும் வீட்டில் தனிமையில் இருக்கும் நிலை உள்ளது. திவ்யா, தரமணியில் உள்ள பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் படித்து வருகிறார். இதுதவிர கால் சென்டர் ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார்.

வீட்டில் நிலவும் தனிமைச் சூழல் தேவையில்லாத பல கெட்ட பழக்கங்களை திவ்யாவுக்குக் கற்றுக் கொடுத்து விட்டது. மது, போதைப் பொருள், ஆண் நண்பர்கள் என உல்லாசமாக இருந்துள்ளார் திவ்யா.

இந்த நிலையில் அவர் வேலை பார்த்து வந்த கால் சென்டரில் பணியாற்றும் பிரசாந்த், ராஜ், ஆதித்யா, வினோத் ஆகியோர் திவ்யாவிடம் நெருங்கிப் பழகினர். அவர் மீது மோகம் கொண்டனர்.

இந்த நிலையில் திவ்யாவுடன் கல்லூரியில் படிக்கும் ஆயுஸ் என்பவரும் நெருங்கிப் பழகினார். அத்தனை இளைஞர்களும் திவ்யாவை அடையத் துடித்தனர். இதற்காக காதல் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தனர்.

இந்த நிலையில் தனது தந்தை ஊருக்குப் போய் விட்டதால் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார் திவ்யா. முதலில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு தனது ஆண் நண்பர்களை அழைத்துச் சென்று ஜாலியாக இருந்துள்ளார் திவ்யா.

பின்னர் மது பாட்டில்கள், நொறுக்குத் தீனிகள், இரவு உணவு ஆகியவற்றுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டின் மொட்டை மாடியில் நேற்று இரவு விருந்து நடந்துள்ளது. அப்போது மது போதையில், பிரசாந்த், ராஜ், வினோத், ஆதித்யா ஆகிய நான்கு பேரும் தங்களது காதலை திவ்யாவிடம் கூறியுள்ளனர்.

அப்போது பார்ட்டியில் கலந்து கொண்ட ராஜின் நண்பர் கார்த்திக் என்பவரும் திவ்யாவின் அழகியில் மயங்கி அவரிடம் சேஷ்டைகள் செய்யத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து மற்றவர்களும் திவ்யாவிடம் அத்துமீறத் தொடங்கினர். அப்போது அவர்களுக்குள் சண்டை மூண்டுள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திவ்யா உடனடியாக அங்கிருந்து வெளியேறி கோடம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் உடனடியாக விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு காவல் நிலையம் சென்றனர்.

போதையில் இருந்த இளைஞர்களை அமர வைத்து அறிவுரை கூறினர். அத்தனை பேரும் பெரிய பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் நீதிபதி ஒருவரின் பேரனாம்.

திவ்யாவுக்கும் போலீஸார் கவுன்சிலிங் நடத்தினர். இதையடுத்து தான் செய்தது தவறுதான், மது விருந்து கொடுத்திருக்கக் கூடாது, மன்னித்து விடுங்கள் என்று கூறிய திவ்யா, தான் கொடுத்த புகாரைத் திரும்பப் பெறுவதாகவும், இனிமேல் இதுபோல நடந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து அனைவரையும் அங்கிருந்து போக போலீஸார் அனுமதித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+