3வது அணிக்கு துணை ஜனாதிபதி-பாஜக திட்டம்
டெல்லி:
ஷெகாவத்துக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தந்தால், துணை குடியரசுத் தலைவர் பதவியை 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு தரலாம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் பைரான் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவு தருவதாக அறிவித்து விட்டது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா விலகுவது உறுதியாகி விட்டது.
இந்த நிலையில், ஷெகாவத்துக்கு 3வது அணியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறங்கியுள்ளது.
இதுதவிர காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத பிற கட்சிகளின் ஆதரவையும் பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், கணிசமான வாக்குகளைக் ெகாண்டுள்ள 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவை ஷெகாவத்துக்குப் பெற துணை குடியரசுத் தலைவர் பதவியை 3வது அணிக்கு ஒதுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் பாஜக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷெகாவத்தை ஆதரிக்க 3வது அணி முன்வந்தால், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த அணி சார்பில் நிறுத்தப்படுவோருக்கு ஆதரவு தர தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது தீர்மானித்துள்ளது.
பிரதீபா பாட்டீலை ஆதரிக்க மாட்டோம் என்று கூறியுள்ள 3வது அணி தலைவர்கள், ஷெகாவத்துக்கும் தங்களது ஆதரவு இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் ஆதரவு தராமல் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவை 3வது அணி எடுக்கவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீபத்தில் சூசகமாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் 3வது அணித் தலைவர்களின் மனதை மாற்றி கூட்டணியின் ஆதரவை ஷெகாவத்துக்குப் பெற பாஜக களம் இறங்கியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் இதுதொடர்பாக அவருடனும், இதர தலைவர்களுடனும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இருப்பினும், துணை குடியரசுத் தலைவர் பதவியை 3வது அணி ஏற்குமா என்பது உறுதியாக தெரிவில்லை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications