நாட்டுக்கு துரோகம் செய்தவர் ஷெகாவத்-காங்கிரஸ் முதல் அடி
டெல்லி:நாடே வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்குத் துரோகம் செய்தவர் பைரான் சிங் ஷெகாவத் என்று காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது சாரிகள் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் குறிப்பாக பாஜக கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் முதல் முறையாக பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற ஷெகாவத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளது.
இந்தியாவே வெள்ளையர்களை எதிர்த்துத் தீவிரமாக போராடிக் கொண்டிருந்தபோது ஷெகாவத் இங்கிலாந்து போலீஸில் சேர்ந்து நாட்டுக்குத் துரோகம் இழைத்தார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறுகையில், 1942ம் ஆண்டு நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமாக இருந்தது. நாடே திரண்டு வெள்ளையர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த சமயத்தில் நாட்டுக்காக போராடாமல், நாட்டை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர் ராணுவத்தில் சேர்ந்தவர் ஷெகாவத். இதன் மூலம் நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர் ஷெகாவத்.
ஷெகாவத்துக்கு எதிராக நான் எந்தக் குற்றச்சாட்டையும் நான் கூறவில்லை. உண்மையில் இவையெல்லாம் ஏற்கனவே பொதுமக்கள் உலவிக் கொண்டிருப்பவைதான்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்தபோது இங்கிலாந்து போலீஸில் சேர்ந்த ஷெகாவத், நாடு சுதந்திரமடைந்து ஒரு வருடம் கழிந்த பிறகே அதிலிருந்து விலகினார்.
இந்த வகையில், பாஜகதான் குடியரசுத் தலைவர் பதவிக்கான மாண்பைக் குறைத்து விட்டது, களங்கப்படுத்தி விட்டது.
ஷெகாவத் மீது கூறப்படும் புகார்கள்தான் உண்மையில் முக்கிய குற்றச்சாட்டு. பிரதீபா மீதான குற்றச்சாட்டுக்கள் எல்லாம் துணை குற்றச்சாட்டுக்கள்தான். ஷெகாவத் மீது இதுதவிர ஏராளமான புகார்கள் உள்ளன. அவை மக்களுக்குத் தெரியும், பாஜகவுக்கும் தெரியும். அவற்றுக்கு பாஜக முதலில் விளக்கம் சொல்லட்டும் என்றார் சிங்க்வி.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications