ஜெ மீது நடவடிக்கை எடுக்கப்படும்-தேர்தல் ஆணையர்
சென்னை: ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தவறு. அவர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாக முதல்வர் கருணாநிதி கூறுவது தவறு.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
மாநில தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, ஜெயலலிதா மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அவர்களின் விளக்கத்தை நரேஷ் குப்தா, தேர்தல் ஆணையத்திடம் அளித்த பின் அதனுடைய அடிப்படையில் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றார்.
இதற்கிடையில் புவனகிரி சட்டபேரவை தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வகுமார், புதுக்கோட்டை தேர்தல் அதிகாரி மோகன் ஆகியோர் தற்போது வருவாய்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் இது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கு அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை சந்திக்க கூடும் எனத் தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications