ஹனீப்புடன் பேச உதவுமாறுபிரதமருக்கு குடும்பம் கோரிக்கை
பெங்களூர்:ஆஸ்திரேலிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முகம்மது ஹனீப்புடன் பேசுவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் உதவுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஹனீப்பின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் மற்றும் லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஹனீப் குடும்பம் பெரும் கவலையில் மூழ்கியுள்ளது.
ஹனீப் அப்பாவி, முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அவரைக் கைது செய்துள்ளனர் என்று ஹனீப்பின் தாயார், தங்கை, தம்பி ஆகியோர் குமுறியுள்ளனர்.
இந்த நிலையில் ஹனீப்புடன் தொடர்பு கொள்வதற்கு பிரதமர் மன்மோகன் சிங் உதவ வேண்டும் என்று ஹனீப்பின் தம்பி முகம்மது சோயப் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் பெங்களூரில் பி.யூ.சி படித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அண்ணன் அப்பாவி. அவர் தவறு செய்திருக்க மாட்டார். எந்தவித தீவிரவாத அமைப்புடனும், நபர்களுடனும் அவருக்குத் தொடர்பு இல்லை.
அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி வந்தது முதல் எங்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருடன் பேச வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் உதவ வேண்டும் என்றார் சோயப்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications