பிளஸ் ஒன் டாக்டர் சிசேரியன் செய்ததுஉண்மை: டாக்டர்கள் சாட்சியம்
திருச்சி:டாக்டர்கள் முருகேசன்-காந்திமதி தம்பதியின் மகன் திலீபன் ராஜ் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தது உண்மைதான் என்று அதுதொடர்பாக டாக்டர் முருகேசன் காட்டிய சிடியைப் பார்த்த ஆறு டாக்டர்களும் சாட்சியம் அளித்துள்ளனர்.
மணப்பாறையில் கிளினிக் வைத்து நடத்தி வந்த டாக்டர் தம்பதிகள் முருகேசன்-காந்திமதி. இவர்கள், கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தங்கள் மகன் திலீபன் மூலம், சிகிச்சை பெற வந்த உறவுக்கார பெண்ணுக்கு சிசேரியன் செய்ய வைத்தனர்.
![]() |
இதை முருகேசன் சி.டி.யாக பதிவு செய்து, மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவ கழக கூட்டத்தில் போட்டுக் காண்பித்தார். இந்த பிரச்சனை பெரியளவில் வெடித்ததால், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் டாக்டர் தம்பதியை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மகன் திலீபனும் சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
போலீஸார் டாக்டர் தம்பதியை காவலில் எடுத்து விசாரித்ததில், டாக்டர் முருகேசன், நான் சி.டி.யை உடைத்து விட்டேன் எனக் கூறினார்.
இந்த நிலையில், மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவக் கழக கூட்டத்தில் முருகேசன் போட்டுக் காட்டிய சிடியைப் பார்த்த 6 டாக்டர்களை அழைத்து போலீஸார் விசாரித்தனர். மேலும் இவர்களை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மணப்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]() |
இதையடுத்து ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனித் தனியாக வாக்குமூலம் அளித்தனர். அப்போது தாங்கள் பார்த்த காட்சிகளை இவர்கள் நீதிபதியிடம் விவரித்தனர்.
சி.டியை உடைத்து விட்டதாக டாக்டர் முருகேசன் கூறியுள்ளதால், அதை பார்த்தவர்கள் தரும் வாக்குமூலம் வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
![]() |
விசாரணைக்கு தடை கோரும் டாக்டர் தம்பதி:
இதற்கிடையே, தங்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், எங்கள் மீதும் எந்த புகாரும் இல்லை, எனவே எங்களை உதவி கலெக்டர் விசாரணை செய்தது தவறு. மேலும் நாங்கள் அளித்த சிகிச்சையில் யாரும் பாதித்திருந்தால் நுகர்வோர் நீதிமன்றம் சென்று நிவாரணம் கேட்டுக் கொள்ள வேண்டும், மேலும் தொடர்ந்து இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்















Click it and Unblock the Notifications