3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்
சென்னை:போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இல்லாததைக் காரணம் காட்டி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தேனி, கன்னியாகுமரி, வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தேனி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய நகரங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பிற மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளிலிருந்து ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தற்காலிகமாக இடம் மாற்றியது அதிமுக அரசு. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கேப் போய் விட்டனர்.
இதனால் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய மருத்துவக் கவுன்சில், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதனால் மூன்று கல்லூரிகளிலும் உள்ள 300 இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதை அதிமுக பெரும் பிரச்சினையாக்கியது. 9ம் தேதி மூன்று மருத்துவக் கல்லூரிகள் முன்பும் போராட்டம் நடத்தப் போவதாகவும் ஜெயலலிதா அறிவித்தார். திமுக அரசின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி, சுகாதார அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் டெல்லி விரைந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
மூன்று மருத்துவக் கல்லூரிகள் குறித்தும் அவருடன் விவாதித்த ராமச்சந்திரன் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தற்போது 3 மருத்துவக் கல்லூரிகளிலும் மீண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர், தேனி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளில் திட்டமிட்டபடி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நடத்தலாம்.
இதுதொடர்பான முடிவு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் எடுக்கப்பட்டது. இந்த முடிவு தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 300 மாணவர் இடங்கள் மீண்டும் கிடைத்துள்ளது. மாணவர்கள் மத்தியில் நிம்மதி எழுந்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications